• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எஸ்.வி.சேகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜர் - 4 மணி நேரம் விசாரணை

எஸ்.வி.சேகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜர் - 4 மணி நேரம் விசாரணை

எஸ்.வி.சேகர்

எஸ்.வி.சேகர்

நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

  • Share this:
தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜரத்தினம் என்பவர் இணையம் மூலம் புகார் அளித்தார்.

அதில், நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்ட் 15- ஆம் தேதி ஏற்றப்போகிறாரா என்றும் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியிருந்தார் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேசிய சின்னங்களை அவமதித்தல் என்ற பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எஸ்.வி சேகருக்கு குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியிருந்தது. அதனடிப்படையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று காலை ஆஜராகினார்.

அவரிடம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அது தொடர்பான விளக்கம் பெற்றுள்ளனர். மேலும், சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின் எஸ்.வி சேகர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதனிடையே எஸ்.வி.சேகர் முன் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: