அடாவடியாக கேள்வி எழுப்பிய ரசிகருக்கு அல்டிமேட் பதில் கொடுத்த பார்த்திபன்!

அடாவடியாக கேள்வி எழுப்பிய ரசிகருக்கு அல்டிமேட் பதில் கொடுத்த பார்த்திபன்!
பார்த்திபன்
  • News18
  • Last Updated: September 9, 2019, 12:49 PM IST
  • Share this:
சமூகவலைதளத்தில் தன்னிடம் ஒருமையில் கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவருக்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். அவரது இயக்கி நடித்திருக்கும் ஒத்த செருப்பு படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளார் பார்த்திபன். ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தைப் பார்த்தவர்களும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக செயல்படும் பார்த்திபனிடம் நெட்டிசன் ஒருவர் அசுரன் படத்தின் ட்ரெய்லர் குறித்து ஒருமையில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்வியைப் பார்க்கும் அனைவரும் நிச்சயம் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுவார்கள்.


ஆனால் நெட்டிசனுக்கு தனது நடத்தையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ஆர்.பார்த்திபன். அவர் அளித்த பதில் பதிவில், பார்த்தேங்க சார்,
அசுரத்தனமா இருந்தது. சூப்பர் நடிப்பு மிஸ்டர் தனுஷ் மற்றும் இயக்குநருக்கு 6 மணிக்கே மெசேஜ் அனுப்புனேங்க சார்! மற்றும், 'எ ஜார்னி ஆஃப் ஃபகிர்' பாத்துட்டு (துட்டு குடுத்து) நான் கை தட்னது ஊருக்கே கேட்டுது” என்று கூறியுள்ளார்.Loading...

பார்த்திபனின் பதிலைப் பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். கேள்வி எழுப்பிய அந்த நெட்டிசன் மீது விமரசனங்களும் எழுந்துள்ளன. பார்த்திபனிடம் ஒருமையில் கேள்வி கேட்ட அந்த நெட்டிசன் ரஜினி மற்றும் தனுஷின் ரசிகர் என்பதும் அந்த ட்விட்டர் ஐடியில் கூறப்பட்டுள்ளது.பிக்பாஸில் மறைக்கப்பட்ட விஷயங்களுக்காக கமல் குரல் கொடுக்க வேண்டும் - மதுமிதா வேண்டுகோள்

வீடியோ பார்க்க: பக்தர்களின் பொருட்களை திருடி மாட்டிக்கொள்ளும் நபர்கள்

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...