கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் பிரபல நடிகர் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ரோபோ சங்கர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற காமெடி நிகழ்ச்சி ரோபோ சங்கரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

 • Share this:
  கொரோனா சிகிச்சை மையங்களுக்கு சென்று, அங்கு சிசிக்கை பெறுபவர்களின் மன அழுத்தத்தை குறைந்த்து வருகிறார் நடிகர் ரோபோ சங்கர்.

  சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, பிறகு பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற காமெடி நிகழ்ச்சி ரோபோ சங்கரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இதையடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் தற்போது ரோபோ சங்கர் செய்து வரும் விஷயம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக கொரோனா சிகிச்சை மையங்களுக்கு நேரில் சென்று பேசி அவர்களை மகிழ்வித்து வருகிறார். இதை கொரோனாவின் முதல் அலையில் இருந்தே செய்து வருகிறார். அதோடு அரசு இல்லங்களில் உள்ள குழந்தைகளிடமும் பேசி அவர்களின் மன அழுத்தம் குறைய வழி செய்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கரின் சேவையை பாராட்டி வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: