முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை

‘ரஜினி படங்களில் பெண்களை தப்பா காட்டிருக்காங்க’ – ஆர்.ஜே. பாலாஜி பேச்சால் சர்ச்சை

மன்னன் படத்தில் படிச்சிட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தி கெட்டவங்க, காபி போட்டு கொடுக்குற குஷ்புவ நல்லவங்களா காட்டிருப்பாங்க. – ஆர்.ஜே. பாலாஜி

மன்னன் படத்தில் படிச்சிட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தி கெட்டவங்க, காபி போட்டு கொடுக்குற குஷ்புவ நல்லவங்களா காட்டிருப்பாங்க. – ஆர்.ஜே. பாலாஜி

மன்னன் படத்தில் படிச்சிட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தி கெட்டவங்க, காபி போட்டு கொடுக்குற குஷ்புவ நல்லவங்களா காட்டிருப்பாங்க. – ஆர்.ஜே. பாலாஜி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெண்களின் சமத்துவம் தொடர்பாக பேசிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, ரஜினி படங்களிலும் பெண்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறியுள்ளார். அவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் நடித்திருக்கும் வீட் விசேஷம் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆர்.ஜே. பாலாஜி பேசியது பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

நிகழ்ச்சியில் ஆர்.ஜே. பாலாஜி பேசியதாவது-

இளைஞர்கள் சிலருக்கு பெண்களை எப்படி அணுகுவது என்றே தெரியவில்லை. அந்த பொம்பள கீழலாம் என்னா வேல செய்ய முடியாதுன்னு சொல்றாங்க. இது ரொம்ப தப்பான ஆட்டிடியூட். ரஜினி நடித்த படையப்பா, மன்னன் படங்களில் பெண்களை ரொம்ப தப்பா காட்டியதுதான், பசங்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமூகத்தில் மிகப்பெரிய வேற்றுமை உருவாகக் காரணம். படையப்பா படத்துல வீட்ல வேலை செய்ற பொண்ணு நல்லவ. வெளிநாட்டுல படிச்சிட்டு வர்ற பொண்ணு கெட்டவன்னு காட்டிருப்பாங்க.

மன்னன் படத்தில் படிச்சிட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தி கெட்டவங்க, காபி போட்டு கொடுக்குற குஷ்புவ நல்லவங்களா காட்டிருப்பாங்க.

இவ்வாறு ஆர்.ஜே. பாலாஜி. பேசியுள்ளார்.

அவரது பேச்சை பாராட்டி, நிகழ்ச்சியின்போது கைத்தட்டல்கள் எழுந்தன. நடிகராக இருந்தும் தனது துறையில் நிகழ்ந்த தவறுகளை சுட்டிக்காட்ட பாலாஜி தயங்கவில்லை என அவரை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். அதேநேரம் அவர் மீது சில விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.

First published:

Tags: Rajinikanth, RJ Balaji