• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கும்பலாக நின்றவர்களிடம் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுரை... நடிகர் ரியாஸ் கான் மீது தாக்குதல்...!

கும்பலாக நின்றவர்களிடம் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுரை... நடிகர் ரியாஸ் கான் மீது தாக்குதல்...!

ரியாஸ் கான்

ரியாஸ் கான்

  • News18
  • Last Updated :
  • Share this:
    தனது வீட்டின் அருகே கூட்டமாக நின்றவர்களை கலைந்துபோகச் சொன்னதால் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக நடிகர் ரியாஸ் கான் போலீசில் புகாரளித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம்வரும் ரியாஸ் கான் சென்னை பனையூா் ஆதித்யாராம் நகா் 8-ஆவது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே 10-க்கும் மேற்பட்டோர் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியில் வாக்கிங் சென்ற ரியாஸ்கான், இதனைப்பார்த்து, ஊரடங்கு நிலை அமலில் இருக்கும் போது, இப்படி, சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று பேசாதீர்கள் என்று கூறியுள்ளார்.

    இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதிலளிக்கவே, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர் ரியாஸ்கானை தாக்க முயன்றதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் ரியாஸ்கான் புகாரளித்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரியாஸ் கானின் மனைவியான உமா ரியாஸ் கானும் திரைத்துறையில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: