Home /News /entertainment /

நடிகர் பிரபாஸின் பெரிய தந்தை கிருஷ்ணம் ராஜு காலமானார்… திரைத்துறையினர் இரங்கல்…

நடிகர் பிரபாஸின் பெரிய தந்தை கிருஷ்ணம் ராஜு காலமானார்… திரைத்துறையினர் இரங்கல்…

நடிகர் கிருஷ்ணம் ராஜு

நடிகர் கிருஷ்ணம் ராஜு

நகர்ப்புற மேம்பாடு, உணவுத்துறை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகளில் கிருஷ்ணம் ராஜு இணை அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் பிரபாஸின் பெரியப்பாவும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான கிருஷ்ணம் ராஜு வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    81 வயதாகும் கிருஷ்ணம் ராஜு தனது ரசிர்களால் ரிபெல் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். இவரது உடன் பிறந்த தம்பி சூர்ய நாராயண ராஜு தான் நடிகர் பிரபாஸின் அப்பா ஆவார்.

    தந்தை சூர்ய நாராயண ராஜு கடந்த 2010-ஆம் ஆண்டில் காலமான நிலையில், தனது பெரிய தந்தை கிருஷ்ணம் ராஜுவுடன் பிரபாஸ் அதிக நெருக்கம் காட்டி வந்தார். இருவரும் ராதே ஷ்யாம் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

    அரசியலில் ஈடுபாடு கொண்ட கிருஷ்ணம் ராஜு 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். நகர்ப்புற மேம்பாடு, உணவுத்துறை, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகளில் கிருஷ்ணம் ராஜு இணை அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.









    அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெரிய தந்தையின் மறைவையொட்டி, நடிகர் பிரபாஸ் கதறி அழுத காட்சிகளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    தெலுங்கு சினிமாவில் 180-க்கும் அதிகமான படங்களில் கிருஷ்ணம் ராஜு பணியாற்றியுள்ளார். நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Tollywood

    அடுத்த செய்தி