முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Rana Daggubati: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய ராணா!

Rana Daggubati: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிய ராணா!

ராணா

ராணா

தமிழில் பெங்களூரு நாட்கள் மற்றும் சமீபத்தில் வெளியான காடன் படத்தில் நடித்திருந்தார்.

  • Last Updated :

400 ஆதிவாசி குடும்பங்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் அவர்களுக்கு தேவையான மளிகைப்பொருகள் மற்றும் மருந்துப் பொருள்களை அளித்து உதவி செய்திருக்கிறார் நடிகர் ராணா.

2010-ல் லீடர் தெலுங்கு சினிமா மூலம் நடிகராக அறிமுகமான ராணா, பாகுபலியில் வில்லனாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். நடுவில் த்ரிஷாவுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

தமிழில் பெங்களூரு நாட்கள் மற்றும் சமீபத்தில் வெளியான காடன் படத்தில் நடித்திருந்தார். இவர் கொரோனா பேரிடர் காலத்தில் பலவேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அளித்து உதவி செய்துள்ளார். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் செய்து தந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராணா அடுத்து மலையாளத்தில் பிருத்விராஜும், பிஜு மேனனும் நடித்த அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். அவருடன் பவன் கல்யாணும் நடிக்கிறார். இது தவிர விராத பர்வம் என்ற படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Rana Daggubati, Telugu movie