ஹோம் /நியூஸ் /entertainment /

ஒரு பிரபலத்திற்கே இப்படியா? - லக்கேஜ் காணாமல் போனதால் விமான சேவை மீது பாய்ந்த ராணா !

ஒரு பிரபலத்திற்கே இப்படியா? - லக்கேஜ் காணாமல் போனதால் விமான சேவை மீது பாய்ந்த ராணா !

ராணா

ராணா

ஒரு பிரபலத்திற்கே இப்படியான பதில் தருகிறார்கள் என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி சேவை அளிப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • chennai |

நடிகர் ராணா டகுபதி ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் தனியார் விமான நிறுவனத்துடனான தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 'இந்தியாவின் மிக மோசமான விமான நிறுவனம்' என்று கூறிய அவர், தனது சாமான்கள் காணாமல் போனது மட்டுமின்றி, கிடைக்கும் நேரம் குறித்த தெளிவு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள், வெப் சீரிஸ் என்று நடித்துவரும் நடிகர் ராணா சமீபத்தில் ஒரு தனியார் விமானத்தில் பயணித்துள்ளார். பயணம் முடிந்து கிளம்பும்போது அவரது லக்கேஜ் ஒன்று காணாமல் போனது.

இது குறித்து விமான அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்களிடம் வேறு எந்த லக்கேஜும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் போன சாமான்கள் குறித்து அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராணா சக பயணிகளிடம் மோசமான சேவை குறித்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'ஒழுக்கத்த விட்டோம் எல்லாம் நாசமா போயிடும்’... சர்ச்சை வசனங்கள் நிறைந்த பகாசூரன் ட்ரெய்லர்!

ஒரு பிரபலத்திற்கே இப்படியான பதில் தருகிறார்கள் என்றால் சாதாரண மக்களுக்கு எப்படி சேவை அளிப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் மோசமான விமான அனுபவம் இது, இதில் பயணிப்பவர்கள் பொருளுக்கு உத்திரவாதம் இல்லை. காணாமல் போன லக்கேஜ்கள் கண்காணிக்கப்படவில்லை. ஊழியர்கள் இவ்வளவு அலச்சியமாக இருக்க முடியுமா என்று ராணா விமான நிறுவனங்களின் படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதோடு அந்நிறுவனத்தின் விளம்பர இடுகையை மேற்கோள் காட்டி, அதை கேலி செய்து இடுகையிட்டார். அதற்கு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், அவரது சாமான்களை கூடிய விரைவில் திரும்ப அளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் சிரமத்திற்கு மன்னிப்பும் கேட்டது.இதையடுத்து அவர் தனது ட்விட்டர் இடுகைகளை நீக்கிவிட்டார்.

பிரபலம் என்பதால் உடனே பதில் அளித்து பொருளை தேடி திரும்ப தருவதாக நிறுவனம் சொல்லியுள்ளது , சாதாரண மக்கள் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பதில்லை. அலட்சியம் செய்யப்படுவதாக ஷொக ஊடகங்களில் அந்நிறுவனத்தின் மீது புகார் அளித்து வருகின்றனர்.

First published:

Tags: Indigo, Rana Daggubati, Twitter