ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெங்கட் பிரபு படத்தில் இணைந்த ராம்கி!

வெங்கட் பிரபு படத்தில் இணைந்த ராம்கி!

ராம்கி

ராம்கி

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தில் நடிகர் ராம்கி இணைந்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'கஸ்டடி’ மே 12, 2023 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. தற்போது நடிகர் ராம்கி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தில் நாக சைதன்யாவின் காதலியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ள நிலையில், அரவிந்த் சாமி வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் ப்ரியாமணி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையே கஸ்டடி படத்தில் ராம்கி இடம்பெற்றிருப்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாரிசு படத்தில் குஷ்பு எங்கே? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர். இளையராஜா பாடல்களுக்கு இசையமைக்க, யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு பின்னணி இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema, Venkat Prabhu