• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் ராமராஜன் நலமாக உள்ளார்... உடல் நலக்குறைவு என பரவும் வதந்திக்கு விளக்கம்

நடிகர் ராமராஜன் நலமாக உள்ளார்... உடல் நலக்குறைவு என பரவும் வதந்திக்கு விளக்கம்

ராமராஜன்

ராமராஜன்

திரையுலகில் இருந்து விலகியிருக்கும் ராமராஜன், ஏற்கனவே சிலமுறை வதந்தி வலையில் சிக்கிய நிலையில், மீண்டும் இதில் மாட்டிக் கொண்டுள்ளார்.

  • Share this:
    பிரபல நடிகர்கள் உடல்நலக்குறைவு என சமூக வலைதளத்தில் விஷம செய்தி பரப்புவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புகழின் உச்சியில் இருந்து இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி ஓய்வில் இருக்கும் பல நடிகர்களின் உடல் நலம் குறித்தும் அவ்வப்போது போலி தகவல்களை, இணையத்தில் உலா விடுவதை சில விஷமிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    நடிகர் செந்தில் சில திரைப்படங்களில் தோன்றினாலும், நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள காரணத்தால் அவரது உடல் நலம் குறித்து அவ்வப்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாவதும் அதனை அவரே மறுப்பதும் சமீபகாலமாக வாடிக்கையாகி வருகிறது.

    இதேபோல நடிகர்கள் கவுண்டமணி, நடிகர் மோகன் உள்ளிட்ட நடிகர்களையும் இந்த புரளி வலையில் இணைய உலகம் அடிக்கடி சிக்க வைக்கிறது. நடிகர் கவுண்டமணி இதுவரை நான்கு முறைக்கு மேல் இணையவாசிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டும் அந்த தகவல் புரளி என மறுத்துள்ளார். இதேபோல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அண்மையில் காலமாகிவிட்டார் என, தகவல்கள் பரவ நான் உயிரோடு இருக்கிறேன் என, அவரே தொலைக்காட்சிக்கு அழைப்பு விடுத்து, உறுதிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    இந்த வரிசையில் சமீபத்தில் நடிகர் ராமராஜனும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். திரையுலகில் இருந்து விலகியிருக்கும் ராமராஜன், ஏற்கனவே சிலமுறை வதந்தி வலையில் சிக்கிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு முறை உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவி, இல்லை என ராமராஜன் தரப்பிலிருந்து மறுப்பு கிடைத்துள்ளது.

    கலைஞர்களை அவர்களது படைப்புகள் மூலம் நினைவுகூற வேண்டிய ரசிகர்கள், இணையத்தில் உள்ள விஷமிகளால் சோகத்துடன் நினைவு கூறப்படுவது வேதனையாக இருந்தாலும், இந்த மாதிரியான எதிர்மறை செய்திகள் பரவுவதால், தங்கள் மீது உள்ள திருஷ்டி கழித்து விடுவதாக பெரும்பாலும் பிரபலங்கள் கருதுகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: