ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆசிரியர் தின நன்னாளில், எனக்கு கல்விப்பிச்சை அளித்த, ஆசிரியப்பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன். 1955 முதல் 1966 வரையிலான காலகட்டம்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப்பள்ளியின் முதல் வகுப்பு ஆசிரியர் மோஸஸ் ஐயா அவர்களுக்கும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் குமார் ஐயா அவர்களுக்கும், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஆசீர்வாதம் அம்மா அவர்களுக்கும், நான்காம் வகுப்பு ஆசிரியை செல்லம் அம்மா அவர்களுக்கும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாதவன் ஐயா அவர்களுக்கும்,
சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியின் ஆறாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும், ஏழாம் வகுப்பு ஆசிரியர் நைனார் முஹம்மது ஐயா அவர்களுக்கும், சிறப்பு தமிழாசிரியர் நடராஜன் ஐயா அவர்களுக்கும், எட்டாம் வகுப்பு ஆசிரியர் கேசவன் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஜனார்த்தனன் ஐயா அவர்களுக்கும்,
பத்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜு ஐயா அவர்களுக்கும், பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகன்நாதன் ஐயா அவர்களுக்கும், சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின் தலைமை ஆசிரியராய் இருந்த செல்வம் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராய் இருந்த, ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும், என் பணிவையும் நன்றிகளையும் காணிக்கையாக்குகிறேன்...
கர்மாவுக்கு திருப்பிக் கொடுக்க தெரியும்... ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர்களெல்லாம், இப்பொழுது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாவிடினும், அவர்கள் மனசாந்தியுடனும், சமாதானத்துடனும், நிறைவோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema