ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''அருமை நண்பர் சுதாகர்..'' ரசிகர் மன்ற நிர்வாகி மறைவுக்கு மனம் உருகி பதிவிட்ட ரஜினிகாந்த்

''அருமை நண்பர் சுதாகர்..'' ரசிகர் மன்ற நிர்வாகி மறைவுக்கு மனம் உருகி பதிவிட்ட ரஜினிகாந்த்

ரஜினியுடன் வி.எம். சுதாகர்

ரஜினியுடன் வி.எம். சுதாகர்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பர் வி.எம்சுதாகர். ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அடுத்த ஆண்டு வி. எம். சுதாகர் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது இருந்தே நடிகர் ரஜினிகாந்த் வி.எம். சுதாகர் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும், ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகியுமான வி.எம். சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பர் வி.எம்சுதாகர். ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அடுத்த ஆண்டு வி. எம். சுதாகர் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது இருந்தே நடிகர் ரஜினிகாந்த் வி.எம். சுதாகர் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புகழ் பெற்ற நடிகராக மாறிய போதும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக செயல்பட்ட சத்தியநாராயணா மாற்றப்பட்டபோது வி.எம்.சுதாகரை அழைத்து தன்னுடைய ரசிகர் மன்றத்தை பார்த்துக் கொள்ள கூறியிருந்தார்.

அதன் முதல் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியாக வி.எம். சுதாகர் செயல்பட்டு வந்தார். மேலும் ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்ட போதும் அதன் தலைமை நிர்வாகியாக வி.எம் சுதாகர் செயல்பட்டார்.

இந்த நிலையில்  அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குறிப்பாக அவருக்கு கிட்னி கோளாறு பிரச்சனை இருந்து வந்தது. அதற்கான செலவை ரஜினிகாந்த் ஏற்றிருந்தார். இந்த நிலையில் வி.எம் சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். 71 வயதாகும் வி.எம்.சுதாகருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் வி.எம்.சுதாகர் உயிரிழந்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Also read... ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார் - வெளியானது மாஸ் அப்டேட்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajini makkal mandram, Rajinikanth