முதன்முதலில் தனக்காக ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய முத்துமணியின் மருத்துவ சிகிச்சை குறித்து போனில் விசாரித்த ரஜினிகாந்த்

முதன்முதலில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி என்ற ரசிகர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் ரஜினிகாந்த் இன்று போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

முதன்முதலில் தனக்காக ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய முத்துமணியின் மருத்துவ சிகிச்சை குறித்து போனில் விசாரித்த ரஜினிகாந்த்
முத்துமணி, ரஜினிகாந்த்.
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 8:01 PM IST
  • Share this:
45 ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு முதன்முதலில் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமணி. அவரை நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது போனில் தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். தற்பொழுது முத்துமணி உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையறிந்த ரஜினி ரசிகர்கள், அவர் நலம்பெறவேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.Also read: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணிகளுக்கான தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் - சீமான் கோரிக்கை


இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்ததுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே  முத்துமணிக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட ரஜினிகாந்த். ”என்னாச்சு முத்துமணி” எனக் கேட்டு அவருடன் சில நிமிடங்கள் உரையாடினார்.

இதனைத்தொடர்ந்து முத்துமணி குடும்பத்தாரிடமும் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். “விரைவில் குணமாகிவிடும் கவலைப்பட வேண்டாம்” என நடிகர் ரஜினிகாந்த் கூறியது ஆறுதலாக இருந்ததாக முத்துமணி நம்மிடம் தெரிவித்தார்.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading