முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு... வீட்டுக்கே அழைத்து கையெழுத்திட்ட ரஜினிகாந்த்..!

போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு... வீட்டுக்கே அழைத்து கையெழுத்திட்ட ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்ட போது..

நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்ட போது..

போதை பொருட்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

தமிழகத்தில் அண்மைக்காலமாக போதைப் பொருள், கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர். போதையற்ற தமிழ்நாடு என்ற முழக்கத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் போதை பழக்கத்துக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டார். மிகச்சிறந்த பணிக்கு தனது வாழ்த்துகள் எனக்கூறி வழியனுப்பியதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Drug addiction, Rajinikanth