ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பேரன்களின் காலுக்கு மஞ்சள்,குங்குமம்.. ரசித்து நிற்கும் ரஜினி! சூப்பர் ஸ்டார் வீட்டு தீபாவளி!

பேரன்களின் காலுக்கு மஞ்சள்,குங்குமம்.. ரசித்து நிற்கும் ரஜினி! சூப்பர் ஸ்டார் வீட்டு தீபாவளி!

ரஜினி

ரஜினி

கோலிவுட் ஸ்டார்களுடன் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி தங்களுடைய சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் ரஜினிகாந்த் தன் பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடினார்.

  இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தும் மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோலிவுட் ஸ்டார்களுடன் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி தங்களுடைய சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை இன்று கொண்டாடினார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தன்னுடைய இரு பிள்ளைகளுக்கும் காலில் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை ஐஸ்வர்யா இடுகிறார். அவர்களின் பின்னால் வெள்ளை நிற ஜிப்பா உடையில் ரஜினிகாந்த் நின்றுகொண்டு பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  முன்னதாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் போயஸ் கார்டன் வீடு அருகே அவரைக் காண ரசிகர்கள் கூடியிருந்தனர். அதனை தொடர்ந்து வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களுக்கு கை அசைத்துக் கொண்டே அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

  Also read... பெண் குழந்தைக்கு அப்பாவான யோகி பாபு.. தீபாவளி தினத்தன்று வீட்டில் விசேஷம்!

  ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் அடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலமாக மிகப் பெரும் சரிவை சந்தித்துள்ளார். இந்தப்படத்தின் மோசமான ரிசல்ட்டுக்காக விஜய் ரசிகர்கள் இயக்குனர் நெல்சனை திட்டி தீர்த்தனர். இந்நிலையில் அவர் ஜெயிலர் படத்தை ரஜினியை வைத்து இயக்கி வருகிறார்.

  அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60% முடிவடைந்துள்ளது. தீபாவளி பிரேக்கிற்குப் பிறகு மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கி நவம்பர் இறுதியில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Aishwarya Rajinikanth, Deepavali, Rajini Kanth