Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் கதைக்கு ரஜினிகாந்தின் சாய்ஸ் யார் தெரியுமா?

பொன்னியின் செல்வன் கதைக்கு ரஜினிகாந்தின் சாய்ஸ் யார் தெரியுமா?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்னத்துடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் பொன்னியின் செல்வன் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதை படிக்கும் போது சில நடிகர்களை அந்த கதாப்பாத்திரங்களாக நினைத்து படித்ததாக தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்னத்துடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் பொன்னியின் செல்வன் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறினார்.

பொன்னியின் செல்வன் பற்றி பேச தொடங்குவதற்கு முன் ரஜினி, மேடையில் தன்னுடன் இருந்த கமல்ஹாசனின் விக்ரம் படத்தின்  வெற்றிக்கு முதலில் வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்துகொண்டார். அதன் பின் மணிரத்னம் பொன்னியின் செல்வன் பற்றி தனக்கே உரிய முறையில் சுவாரசியமான தகவல்களை கூறினார்.

பொன்னியின் செல்வனில் மூன்று கதாநாயகர்கள் உள்ளனர். முதல் அமரர் கல்கி, இரண்டாவது சுபாஸ்கரன், மூன்றாவது மணிரத்னம். 70 ஆண்டுகளுக்கு முன் கல்கி எழுதிய நாவல், ஐந்து அரை ஆண்டுகள் வந்தது. ஒவ்வொரு வாரம் பிரதி வரும்போது, ஸ்டார் படங்களுக்கு முதல் நாள் முதல்காட்சிக்கு டிக்கெட் வாங்க நினைப்பது போல் இதன் பிரதியை வாங்க மக்கள் அலைமோதுவர்கள்.

அப்படிப்பட்ட பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர், கமல் என நிறைய பேர் எடுக்க நினைத்தார்கள். ஆனால் முடியவில்லை. அதற்கு அனைத்தும்  இணைந்து வர வேண்டும் என்றதால் நடக்கவில்லை என நினைக்கிறேன். தாற்போது இந்தப் படத்தை யாராவது எடுப்பார்களா என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது சுபாஸ்கரன் எடுத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். அசுர இயக்குனத் மணிரத்னம் மீது வைத்த நம்பிக்கையின் மூலம் இன்று நடந்துள்ளது என கூறினார்.

அதை தொடர்ந்து தளபதி படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததை பற்றி கூறினார். அப்போது தளபதியில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்.  முதலில் ஆற்றங்கரை ஓரத்தில் ஷோபனாவுடம் இடம்பெறும் பாடலை படமாக்கினார். நான் அணிந்திருந்த உடையை பார்த்து மணிரத்னம், சந்தோஷ் சிவன், சுஹாசினி உள்ளிட்டோர் சீரிஸாக பேசிகொண்டிருந்தனர்.

ஷோபனாவிடம் என்ன பேசிகொள்கிறார்கள் என கேட்டேன். அதற்கு அவர் விளையாட்டாக உங்களை மாற்றிவிட்டு கமல்ஹாசனை போடலாம் என பேசுகிறார்கள் என்றார். அதன்பின் முதல் நாள் என்பதால் உடை பற்றி எதுவும் சொல்லாமல் படமாக்கினார்கள். அடுத்த நாள் எப்படி நடித்தாலும் வேண்டாம் என்கிறார். அதிர்ச்சி, சந்தோஷம் என உள்ளிட்டவற்றிற்கு நான் வழக்கமான ஆக்‌ஷன் வைத்துள்ளேன். ஆனால் பீல் பண்ணுங்க பீல் பண்ணுங்க என்று கூறுகிறார். எனக்கு ஒன்னும் புரியவில்லை.

10 ஷாட் 12 ஷாட் போகிறது. நான் உடனே கமல்ஹாசனுக்கு கால் செய்துகேட்டேன். சிரித்தார் எனக்கு தெரியும் என சொன்னார். அதன் பின் நான் ஒன்று கூறுகிறேன் என ஒரு ஐடியா கொடுத்தார். அவரை நடித்துக்காட்ட சொல்லுங்கள், அத கவனிப்பதுப்போல் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் யோசியுங்கள், அதன் பின் நடியுங்கள் என்றார். நானும் தம் அடித்துக்கொண்ட அவர் சொன்னதுபோல் செய்தேன். அதன்பின் நடித்தேன் உடனே ஓகே என சொல்லிவிட்டார். நாங்கள் இருவரும் அவரை ஏமாற்றியுள்ளோம் என நகைச்சுவையாக பேசினார்.

அதன் பின் பொன்னியின் செல்வன் புத்தகம் குறித்து பேசினார். அப்போது நான் புத்தகம் அதிகம் படிப்பேன். முதலில் புத்தகத்தின் பக்கம் என்ன என கேட்பேன். 200, 300 பக்கங்கள் என்றால் ஓகே. பொன்னியின் செல்வன் பக்கத்தை கேட்டதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த பக்கம் போகவில்லை.

Also read... வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

ஒரு முறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வந்திய தேவன் கதாபாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் என்று கூறியிருந்தார். அதை கேட்ட உடன் எனக்கு குஷியாகிவிட்டது. உடனே கொண்டுவாட புத்தகத்தை என்றேன். படித்தால் போயிகிட்டே இருக்கிறது. நந்தினி கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. கல்கி இருந்திருந்தால் அவர் வீட்டுக்கு சென்று காலில் விழுந்திருப்பேன் என தெரிவித்தார். அந்த கதையை மணிரத்னம் சிறந்தவர்களை கொண்டு உருவாக்கியுள்ளார். நிச்சயம் வெற்றியடையும் என் கூறினார்.

அதன் பின் பேசிய கமல் பொன்னியின் செல்வன் கதை உரிமையை நான் வாங்கியிருக்கிறேன் என்று தெரிந்தவுடன், வந்திய தேவன் கதாபாத்திரத்தில் உங்களை நடிக்க வைக்குமாறு சிவாஜிகணேசன் கூறினார். அந்த வகையில் ஜெயலலிதா மற்றும் சிவாஜி ஆகிய இருவர் உங்களை அந்த கதாபாத்திரத்திற்கு பரிந்துரைத்துள்ளனர் என பாராட்டினார்.

அதன் பின்பு நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதை படிக்கும் போது அருண்மொழியாக கமல், ஆதித்த கரிகாலனாக விஜயகாந்த், நந்தினியாக ரேகா, குந்தவையாக ஸ்ரீதேவி, பெரியபழுவேட்டையராக சத்யராஜ் ஆகியோரை நினைத்துகொண்டதாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ponniyin selvan, Rajinikanth

அடுத்த செய்தி