பேட்ட vs விஸ்வாசம் - பொங்கல் ரேஸ் வின்னர் யார்? சென்னை வசூல் நிலவரம்

மேலும், விஸ்வாசம் படத்தை சென்னையில் விநியோகம் செய்த நிறுவனம் “ஜெயிச்சிட்டோம் பங்காளிகளா!!!” என்று ட்வீட் செய்துள்ளது.

news18
Updated: January 11, 2019, 10:37 AM IST
பேட்ட vs விஸ்வாசம் - பொங்கல் ரேஸ் வின்னர் யார்? சென்னை வசூல் நிலவரம்
பேட்ட மற்றும் விஸ்வாசம்
news18
Updated: January 11, 2019, 10:37 AM IST
உலகம் முழுவதும் நேற்று வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில், சென்னை வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் நேற்று வெளியானது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா 'நிரஞ்சனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் விஸ்வாசம் சுமார் 88 லட்சம் ரூபாய் வசூலையும், பேட்ட 1.12 கோடி ரூபாயையும் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விஸ்வாசம் படத்தை சென்னையில் விநியோகம் செய்த நிறுவனம் “ஜெயிச்சிட்டோம் பங்காளிகளா!!!” என்று ட்வீட் செய்துள்ளது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு தோராயமான வசூல் நிலவரம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Loading...



இந்நிலையில் சென்னையை பொருத்தவரை வசூலில் விஸ்வாசத்தை பேட்டை படம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

Also read... வசூல் வேட்டைக்குத் தயார் - விஸ்வாசம் டீம் நேரடி சவால்

Also see...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...