ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லைகா- ரஜினி கூட்டணி... ஒரே நாளில் 2 இரண்டு படங்களுக்கு பூஜை

லைகா- ரஜினி கூட்டணி... ஒரே நாளில் 2 இரண்டு படங்களுக்கு பூஜை

லைகா-ரஜினி கூட்டணி

லைகா-ரஜினி கூட்டணி

Rajinikanth | ரஜினிகாந்தின் புதிய திரைப்படங்களுக்கான பூஜை நவம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டு படங்களுக்கான பூஜை நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

  சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  அதற்கான இறுதி பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று முடிந்தது.  இந்த நிலையில் லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய இரண்டு படங்களுக்கான பூஜை வரும் நவம்பர் 5ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறுகிறது.

  அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவடைந்ததும், ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதேபோல் அந்த விழாவில் அந்தப் படங்களின் இயக்குனர்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளர். ஏற்கனவே சிபி சக்ரவர்த்தி படத்தில் நாயகனாகவும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியிருந்தது.

  நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து  வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படம் முடிந்ததும் லைகா நிறுவனத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் தொடங்கும்.  அதற்கான அறிவிப்பை நவம்பர் முதல் வாரம் வெளியிடுகின்றனர்.

  ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் லைகா தயாரிப்பில் மட்டும் இரண்டு படங்களில் அவர் நடிக்கிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  Read More: வரவேற்பை பெறும் சமந்தாவின் ‘யசோதா’ பட ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்!!

  இதன் மூலம் ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்பதும் உறுதியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்திடம் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத் உள்ளிட்ட இயக்குனர்கள் கதை கூறியுள்ளனர். அதில் இரண்டு கதைகளை தேர்வு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Lyca, Rajinikanth, Tamil Cinema