சிகிச்சைக்கு நடுவே அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த்

சிகிச்சைக்கு நடுவே அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த்

தன் உடல்நிலை குறித்து கவிப்பேரரசு வைரமுத்துவிடம் தொலைபேசியில் தெரிவித்த கருத்தை வைரமுத்து கவிதையாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

  • Share this:
சிகிச்சைக்கு நடுவே அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த்.

அண்ணாத்த' படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், வழக்கமான தனது உடல்நல பரிசோதனைக்காக கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். வழக்கமான  உடல் நிலை பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதற்கு அமெரிக்க அரசிடமும் மத்திய அரசிடம்  சிறப்பு அனுமதி பெற்று தனது பயணத்தை மேற்கொண்டார்

பின்னர் வழக்கமாக அவர் சந்திக்கும் மருத்துவ குழுவை அணுகி முழு உடல் பரிசோதனையை செய்து கொண்டார். மேலும் தன் உடல்நிலை குறித்து கவிப்பேரரசு வைரமுத்துவிடம் தொலைபேசியில் தெரிவித்த கருத்தை வைரமுத்து கவிதையாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் அவர்களுடைய உடல்நிலையில் தகவல் அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை பதிவிட்டார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி "இந்தியாவிலிருந்து யாரும் அமெரிக்க வர அந்நாடு தடை செய்துள்ள நிலையில் ரஜினி மட்டும் எப்படி அங்கு சென்றார்."உடல் நலப் பரிசோதனை என்றால் இந்தியாவில் சிறந்த சிகிச்சை இல்லையா?, நடிகர் ரஜினிகாந்திற்கு  அப்படி என்ன உடல்நிலை பிரச்சினை என கேள்விகளை ட்விட்டரில் கேள்வி அடுத்த ரஜினி ரசிகர்கள் கஸ்தூரியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பின்னர் ஒருவழியாக ரஜினி ரசிகர்களை சமாதானப்படுத்த ரஜினியை புகழும் வகையில் ரஜினிகாந்த், அண்ணாத்த''தமிழகம் வரவை  அனைவரும் வரவேற்போம் என பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Also read: பேரிடியாய் வந்த செய்தி - சிக்கலில் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா, திருச்சி சாதனா

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் தனது நண்பர்கள் பலரை நேரில் சந்தித்து வருகிறார். சிகிச்சைக்கு இடையே உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி நடைப்பயிற்சி என்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தனது நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்து வருவதால் மிகுந்த புத்துணர்ச்சியோடு நடிகர் ரஜினிகாந்த் இருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அவர் அமெரிக்காவில் இருக்கும் ஒரு புகைப்படம் ஏற்கனவே சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன. தற்போது மேலும் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

 
Published by:Esakki Raja
First published: