ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'அப்பாவின் அன்பு! விலைமதிப்பற்ற போட்டோ!' ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் பகிர்ந்த ஐஸ்வர்யா!

'அப்பாவின் அன்பு! விலைமதிப்பற்ற போட்டோ!' ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் பகிர்ந்த ஐஸ்வர்யா!

ரஜினி

ரஜினி

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குழிப்படுத்தும் விதமாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்

  இன்று விஜயதசமி கொண்டாடப்படும் நிலையில் திரையுலகினர் பலரும் தங்களது ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும், ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குழிப்படுத்தும் விதமாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் ஹாயாக வீட்டில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்த்துக்கொண்டிருக்கும் அந்தப்புகைப்படம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ''இந்தப்புகைப்படத்துக்கு ஃபில்டர் எடிட் தேவையில்லை. ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். விலைமதிப்பற்ற நேர்மறையான ஒரு போட்டோ. அப்பாவின் அன்பு’’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டு செய்து வருகின்றனர்.


  இதையும் படிங்க:    பணம் கொட்டிய 2022... தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்த ஐந்து படங்கள்!


  சமீபத்தில் ரஜினிகாந்த வாக்கிங் சென்ற வீடியோவும் வைரலானது. போயஸ் கார்டன் பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வீடியோதான் வைரலானது. ரஜினியின் வாக்கிங்கை ஒரு ரசிகர் தன்னுடைய மொபைலில் வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கே உரிய வேக நடையுடன் நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

  அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Aishwarya Rajinikanth, Rajinikanth