ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினியின் ஜெயிலர் ஷூட்டிங்! படையப்பா காட்சியை மிஞ்சிய சம்பவம்! கும்பல் கும்பலாக கூடிய மக்கள்!

ரஜினியின் ஜெயிலர் ஷூட்டிங்! படையப்பா காட்சியை மிஞ்சிய சம்பவம்! கும்பல் கும்பலாக கூடிய மக்கள்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் தொடங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் தொடங்கியது. ரஜினி ஷூட்டிங் என்றதும் மக்கள் கும்பல் கும்பலாக படையெடுத்து படையப்பா படத்தை ரியலில் காட்டினர்.

  சன் பிக்சர்ஸ்-ன் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். அண்ணாத்தே படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ''மூக்கு ஆபரேஷன்.. உடல் மாற்றத்துக்கு உரிமை உண்டு'' - பளீரென பேசிய ஸ்ருதிஹாசன்!

  ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் 'ஜெயிலர்' படத்தின் நட்சத்திர நடிகர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் கேமராவை கவனிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது, அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஹைதராபாத் சென்றனர். இந்நிலையில்தான் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் தொடங்கியுள்ளது.

  கடலூர் - புதுவை எல்லையில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள அழகியநத்தம் பாலம் பகுதியில் இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று ரஜினிகாந்த் நடித்த சண்டை காட்சிகள் இந்த பாலத்தில் படமாக்கப்பட்டன. ரஜினியுடன் துணை நடிகர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர். படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி முதல் முதலாக கடலூர் மாவட்டத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளது அவர்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

  கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் அழகிய நத்தம் பகுதிக்கு வந்தாலும் ஒரு கிலோமீட்டருக்கு முன்பே காவல்துறையினர் மற்றும் பவுன்சர்கள் அவர்களை உள்ளே விட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். அந்த அழகியநத்தம் பாலம் பகுதியில் யாரும் அனுமதிக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ரஜினியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். கும்பல் கும்பலாக ரஜினியைப் பார்க்க மக்கள் வந்தது படையப்பா படத்தின் காட்சியை நினைவூட்டுவதாக பலரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Rajinikanth