ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினிகாந்த் - லைக்கா கூட்டணியில் அடுத்தடுத்து 2 படங்கள்... உறுதியான தகவல்

ரஜினிகாந்த் - லைக்கா கூட்டணியில் அடுத்தடுத்து 2 படங்கள்... உறுதியான தகவல்

லைக்கா- ரஜினிகாந்த் கூட்டணி

லைக்கா- ரஜினிகாந்த் கூட்டணி

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கிறார். ரஜினிகாந்த் மற்றும் தமிழ் குமரன் சந்தித்து படங்களை உறுதி செய்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் ரஜினிகாந்த் லைக்கா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பது உறுதியானது.

லைகா நிறுவனத்தின் சிஇஓ தமிழ் குமரன் நடிகர் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த சந்திப்பில் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் அடுத்த திரைப்படங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதிலும் இரண்டு படங்களுக்கான ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் முதல் வாரம் வெளியாகிறது.

Read More: துணிவு பொங்கல் வெளியீடு அறிவிக்கப்பட்டதும் விஜய் செய்த விஷயம்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த வருகிறார்.அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த படம் முடிந்ததும் லைகா நிறுவனத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் தொடங்கும்.  அதற்கான அறிவிப்பை நவம்பர் முதல் வாரம் வெளியிடுகின்றனர். ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் லைகா தயாரிப்பில் மட்டும் இரண்டு படங்களில் அவர் நடிக்கிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்பதும் உறுதியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்திடம் சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், எச்.வினோத் உள்ளிட்ட இயக்குனர்கள் கதை கூறியுள்ளனர். அதில் இரண்டு கதைகளைதேர்வு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

Published by:Srilekha A
First published:

Tags: Rajinikanth