முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வோர் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம்… ரஜினிகாந்த் அழைப்பு

ஆகஸ்ட் 15 அன்று ஒவ்வோர் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம்… ரஜினிகாந்த் அழைப்பு

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

வரும் 15ம்தேதி சாதி மத கட்சி வேறுபாடு இல்லாமல் நாம எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு தேசியக் கொடியைக் கட்டி பெருமைப்படுவோம். – ரஜினிகாந்த்

  • Last Updated :

ஒவ்வோர் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்பதற்கேற்ப வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையேற்று பொதுமக்களும், பிரபலங்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், அனைவரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிப்பதாவது-

இந்த ஆண்டு நாம் சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு. நம் நாட்டை வணங்கும் விதமாக, நம் எல்லோருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ வருஷங்கள் பல லட்சம்பேர் எத்தனையோ சித்தரவதைகளை,கொடுமைகளை அனுபவிச்சாங்க.

எத்தனையோ பேர் அவர்களோட உயிரை தியாகம் பண்ணிருக்காங்க. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வரும் 15ம்தேதி சாதி மத கட்சி வேறுபாடு இல்லாமல் நாம எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு தேசியக் கொடியைக் கட்டி பெருமைப்படுவோம்.

நாடு இல்லைனு சொன்னா நாம இல்ல. நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த்.

top videos

    இவ்வாறு ரஜினி தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Rajinikanth