Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் நாவலை நான் படிக்க ஜெயலலிதாதான் காரணம் - ரஜினிகாந்த்

பொன்னியின் செல்வன் நாவலை நான் படிக்க ஜெயலலிதாதான் காரணம் - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், ஜெயலலிதா

ரஜினிகாந்த், ஜெயலலிதா

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என ஜெயலலிதா கூறியதன் காரணமாக பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்திக், இது சாதாரண படம் அல்ல. இதற்கு பிறகு எங்களின் அடையாளம் மாறப்போகிறது என நினைக்கிறேன்.  இரண்டு உண்மை சம்பவங்களுக்கு நடுவில் இருப்பதை சொல்வது தான் Historical Fiction  என்பார்கள்.  அப்படிப்பட்ட கதையை கொடுத்தவர் கல்கி. அன்பு, ஆன்மீகம், அரசியல் எல்லாம் கலந்து கொடுத்திருந்தார்.

இந்த கதையை திரைப்படமாக பலரும் முயற்சித்திருக்கின்றனர். இதற்கு மூன்று தலைமுறை நடிகர்கள் தேவைப்பட்டுள்ளார்கள்,  மூன்று தலைமுறை தொழில்நுட்ப கலைஞர்கள் தேவைப்பட்டுள்ளனர்.  இந்த படத்தில் நடித்தது எங்களுக்கு எல்லாம் பெருமை என கூறினார்.

ஜெயம் ரவி பேசுகையில், இந்த படம் எப்படி வந்தது என்று அனைவரும் என்னிடம் கேட்பார்கள். நான் யோசித்துப் பார்த்துள்ளேன். அப்பா அம்மா செய்த நல்ல விஷயங்களின் விளைவாக இந்த திரைப்படம் கிடைத்ததாக நினைப்பேன். இன்னும் கொஞ்சம் யோசித்தால், உனக்கு கிடைக்காமல் இருப்பது கிடைக்காமல் இருக்காது, கிடைக்காதது கிடைக்காது என்ற ரஜினிகாந்த் பேசிய வசனம் நினைவுக்கு வரும். இன்னும் ஆழமாக யோசித்துப் பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளாக நான் தினமும் காலையில் எழுந்து வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன்.  அதற்கு கிடைத்ததாக நினைத்துக் கொள்வேன் என ஜெயம் ரவி தெரிவித்தார்.

நடிகர் விக்ரம் பேசுகையில்,  சோழர் காலத்தில் இருந்த நடைமுறைகளை கதையாக கூறி விவரித்தார். குறிப்பாக உலகத்திலேயே சிறந்த கப்பல் படை சோழர்களிடமிருந்தது.  சீனா வரை சென்றுள்ளனர்,  ஏழைகள் இல்லாத நாடாக இருக்க மாடுகள் கொடுக்கப்பட்டது,  அப்போதே சிறிய வங்கி முறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பதையெல்லாம் சுட்டிகாட்டினார்.

அத்துடன் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பார்கள். அது வெறும் சொல்ல அல்ல. அதன் பின் பல விஷயங்கள் உள்ளன. பல மன்னர்கள் பயணம் உள்ளது. அமெரிக்கா தற்போது பெரிய நாடு.  கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த போது அங்கு Civilization  கிடையாது. அப்போதே நம் நாடு எப்படி இருந்தது பாருங்கள் என பெருமைப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் கதையை எம்.ஜி.ஆர் படமாக உரிமை பெற்றிருந்தார்.  அதன் பின் நான் அவரிடம் பொன்னியின் செல்வன் கதையை வாங்கினேன்  அப்போது சீக்கிரம் எடுத்து விடு என்று கூறினார்.

இன்று நான் வாங்கி வைத்த பொன்னியின் செல்வன் கதை Public Domain-ல் வந்ததை பார்த்தபோது வருத்தமாக இருந்தது.  நானும் மணிரத்தினமும் பொன்னியின் செல்வன் கதை பற்றி பலமுறை பேசி உள்ளோம். நான் எடுப்பதா? அவர் எடுப்பதா? என்ற போட்டி நடந்து கொண்டு இருந்தது. இப்போது விடாப்பிடியாக மணிரத்னம் பொன்னியின் செல்வன் படமாகியுள்ளார். இது மணிரத்னத்திற்கு பெருமைக்குரிய படைப்பாக இருக்கும் எனவும் பாராட்டினார். மேலும் இந்த திரைப்படத்திற்கு பின்னணி பேசி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையை கேட்டுவிட்டு படிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். ஒருமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெறும் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் யார் நடித்தார் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த் என்று பதிலளித்திருந்தார்.  அவர் கூறியதைக் கேட்டவுடன் குஷி ஆகிவிட்டேன். உடனே அந்த புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். படிக்க படிக்க ஆர்வமாக சென்று கொண்டே இருந்தது. கல்கி உயிருடன் இருந்திருந்தால் அவரது இல்லத்திற்கு சென்று காலில் விழுந்திருப்பேன் என்று கூறினார்.

பொன்னியின் செல்வன் படத்தில் பணி புரிந்தது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பல சுவாரசியமான பின்னணியை கூறினார். இந்த திரைப்படத்திற்காக பாலிக்கு சென்று ஆய்வுகள் நடத்தி இசையமைத்தாக தெரிவித்தார்.  என்னுடைய தந்தையுடன் இருந்தபோது மனோகரா உள்ளிட்ட பலவற்றை கேள்விப்பட்டு உள்ளேன். அவற்றைக் கொண்டு முதலில் இசை  அமைத்து கொடுத்தேன். ஆனால் அதை மணிரத்னம் நிராகரித்து விட்டார்.

Also read... வந்தியத்தேவனாக ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் முடிந்த கமலின் கனவு

அதன் பின்னே பாலி சென்றோம், நம் மன்னர்கள் அங்கு சென்றுள்ளனர். அங்கு நடத்திய ஆய்வை வைத்து இசையை உருவாக்கி மணிரத்னத்திற்கு காண்பித்தேன். நன்றாக இருப்பதாக கூறி தேர்வு செய்தார் என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.

அதேபோல் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்தது ஆசீர்வதிக்கப்பட்ட,  அதிர்ஷ்டமாக கருதுவதாக தெரிவித்தனர்.  அத்துடன் கனவு நிறைவேறியது போல் இருப்பதாகவும் கூறினர்.  இந்த நிகழ்ச்சியின் இறுதியில் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ponniyin selvan, Rajinikanth

அடுத்த செய்தி