முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வறுமையில் தவிக்கும் பிதாமகன் தயாரிப்பாளருக்கு ரஜினிகாந்த் உதவி!

வறுமையில் தவிக்கும் பிதாமகன் தயாரிப்பாளருக்கு ரஜினிகாந்த் உதவி!

ரஜினி, தயாரிப்பாளர் வி.ஏ. துரை

ரஜினி, தயாரிப்பாளர் வி.ஏ. துரை

நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதேபோல நடிகர் கருணாஸ் 50,000 ரூபாய் நிதி கொடுத்து உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல் அவதிப்பட்டு வரும் தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் மருத்துவ செலவுக்கு உதவுவதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.

‘என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘லூட்டி’, ‘கஜேந்திரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் ‘பாபா’ படத்திலும் எக்சிகியூட்டிவ் புரொடியூசராக பணியாற்றியுள்ளார். அந்த திரைப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் இவருக்கு 51 லட்ச ரூபாய் சம்பளமாக கொடுத்திருந்தார்.

அதன் பிறகு இவர் தயாரிப்பாளராக உயர்ந்து தமிழில் பல்வேறு படங்களை தயாரித்த வி.ஏ.துரை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். மனைவி, மகளை பிரிந்து வாழும் அவர், தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார்.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய அவர் எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். இருப்பினும் அவரது காலில் காயங்கள் இன்னும் ஆரவில்லை. அத்துடன் உடல் மெலிந்தும் அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருகிறார்.

இது குறித்து சமீபத்தில் அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு மருந்து வாங்கக் கூட காசில்லாமல் வறுமையில் வாடும் தனக்கு யாராவது உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதேபோல நடிகர் கருணாஸ் 50,000 ரூபாய் நிதி கொடுத்து உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வி.ஏ.துரையின் தகவல் அறிந்த நடிகர் ரஜினிகாந்த், ஏழ்மை நிலையில் வசித்து வரும் துரையை சந்தித்து உதவி குறித்து கேட்டு அறிய தன்னுடைய தரப்பில் ஆட்களை அனுப்பியிருந்தார். அவர்களிடம் தனக்கு தேவையான உதவி என்ன என்பதை வி.ஏ.துரை கூறியுள்ளார். அதை நடிகர் ரஜினிகாந்திடம் கூறியிருக்கின்றனர். மேலும் அந்த உதவியை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார். அதேபோல் நடிகர் ராகவா லாரன்ஸும் சில மருத்துவமனை செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth