ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கண்ணீரில் முடிந்த ரஜினிகாந்தின் இளவயது காதல்... நடிகர் ஸ்ரீனிவாசன் உணர்வுப் பகிர்வு!

கண்ணீரில் முடிந்த ரஜினிகாந்தின் இளவயது காதல்... நடிகர் ஸ்ரீனிவாசன் உணர்வுப் பகிர்வு!

ஸ்ரீனிவாசன் - ரஜினிகாந்த்

ஸ்ரீனிவாசன் - ரஜினிகாந்த்

பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேருவதற்கு, பணத்துக்காக எங்கே செல்வது என்று ரஜினி செய்வதறியாது நின்றபோது, அந்த பெண் தான் அவருக்கு பணம் கொடுத்து உதவினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்தின் இள வயது காதல் குறித்து ஒரு நேர்க்காணலில் தெரிவித்துள்ளார் மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன்.

மலையாள திரையுலகில் முன்னணிக் கதாசிரியராக வலம் வந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றிய பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இவரது பல கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்களாக உருவாகியுள்ளன. தவிர இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் ஸ்ரீனிவாசன்.

குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிப்புக்கும் புகழ்பெற்ற இவர், தேசிய விருது, மாநில விருதுகள் என பல்வேறு பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவரது மகன் வினீத் ஸ்ரீனிவாசன், மலையாள சினிமாவில், புகழ்பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ரஜினிகாந்துடன் படித்த ஸ்ரீனிவாசன் மலையாள ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், ரஜினியின் இளவயது காதல் குறித்து பேசியுள்ளார். அதில், “ரஜினிகாந்த் கண்டெக்டராக இருந்தபோது பேருந்தில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க துவங்கியுள்ளனர்.

ஒரு நாள் என்னுடைய நாடகம் நடக்கிறது வந்து நாடகத்தை பார் என்று அந்த பெண்ணை ரஜினிகாந்த் அழைத்துள்ளார். நாடகத்தில் ரஜினியின் நடிப்பை கண்ட அந்த பெண் ஷாக்காகியுள்ளார். அதன்பின் பிலிம் இன்ஸ்டிட்யூட் ஒன்றில் ரஜினியை சேரச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த பெண் கொடுத்த தைரியத்தினால் தான் ரஜினி பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேர்ந்தார்.

பிரபல நடிகை தனது கசின் சிஸ்டர் என்பதை 40 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்த வனிதா விஜயகுமார்!

ஆனால், பிலிம் இன்ஸ்ட்யூட்டில் சேருவதற்கு, பணத்துக்காக எங்கே செல்வது என்று ரஜினி செய்வதறியாது நின்றபோது, அந்த பெண் தான் அவருக்கு பணம் கொடுத்து உதவினார். ஆனால், திடீரென ஒரு நாள் அந்த பெண் ரஜினியின் வாழ்க்கையில் இருந்து காணாமல் போய்விட்டார். கதறி அழுத ரஜினி, நான் வாழ்வதற்கு ஒரே காரணம் அந்த பெண்ணை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதற்காக தான் என்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth