முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினிக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தும் ரசிகர் - இதில் ஹைலைட் என்ன தெரியுமா?

ரஜினிக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தும் ரசிகர் - இதில் ஹைலைட் என்ன தெரியுமா?

ரஜினிகாந்த்துடன் அவரது ரசிகர் சோளகர் ரவி

ரஜினிகாந்த்துடன் அவரது ரசிகர் சோளகர் ரவி

நடிகர் ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் பாராட்டு விழா ஒன்றை நடத்துகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்த்திற்கு அவரது ரசிகர்கள் பாராட்டு விழா ஒன்றை நடத்துகின்றனர். அந்த விழாவில் நலிவடைந்த ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் செய்ய உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்களின் ஒருவராக சோளிங்கரை சேர்ந்த ரவி செயல்படுகிறார். ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட செயலாளராக செயல்பட்ட இவர், ரஜினி பெயரில் பல ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அத்துடன் ரஜினிகாந்தை பாராட்டும் வகையில் சில மாநாடுகளையும் நடத்தியுள்ளார்.

குறிப்பாக, 2017 ஆம் ஆண்டு சோளிங்கரில் 'மலரட்டும் மனிதநேயம்' என்ற பெயரில் விழா நடத்தி இருந்தார்.  அதற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரஜினிகாந்த் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர். அந்த விழாவில் வாழ்வாதாரம் இழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் வரும் மார்ச் 26 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமான ஒரு விழாவை நடத்த சோளிங்கர் ரவி திட்டமிட்டு இருக்கிறார்.  அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு பாராட்டு மற்றும் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இதற்கான அனுமதியை ரஜினிகாந்த்திடம் முறையாக பெற்றுள்ளனர்.

இந்த விழாவிற்காக தமிழகத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர். இந்த விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக நலிவடைந்த ரஜினி ரசிகர்களை கண்டறியும்  பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் அந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்தின் நண்பர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த விழாவிற்கான தலைப்பை தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் விரைவில் வெளியிட உள்ளனர்.

First published:

Tags: Rajinikanth