ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''மழையில நிக்காதீங்க.. ரஜினிகாந்த் ஊரில் இல்லை'' - லதா ரஜினிகாந்த் பேட்டியால் ரசிகர்கள் சோகம்!

''மழையில நிக்காதீங்க.. ரஜினிகாந்த் ஊரில் இல்லை'' - லதா ரஜினிகாந்த் பேட்டியால் ரசிகர்கள் சோகம்!

லதா

லதா

வழக்கம் போல் ரஜினிகாந்தின் பிறந்தநாளில் அவரை காண ரசிகர்கள் அவரின் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras]

நடிகர் ரஜினிகாந்த் ஊரில் இல்லை என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடவும், அவரை காணவும் ரசிகர்கள் அவரது இல்லத்தின் முன்பு குவிவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை முதலே ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அவர் சார்பாக எல்லாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஊரில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்து ரசிகர்களைச் சந்தித்திருப்பார். மழையில் யாரும் காத்திருக்க வேண்டாம் என தெரிவித்தார்.

இதனால் ரசிகர்கள் ரஜினிகாந்தை பார்க்க முடியாமல் கவலையோடு திரும்பி சென்றனர்.

First published:

Tags: Rajinikanth, Rajinikanth Fans