ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரீ ரிலீஸ் ட்ரெண்டை தொடங்கிவைத்த ரஜினியின் ‘பாபா’… அஜித், விஜய் படங்கள் மீண்டும் திரையிட வாய்ப்பு…

ரீ ரிலீஸ் ட்ரெண்டை தொடங்கிவைத்த ரஜினியின் ‘பாபா’… அஜித், விஜய் படங்கள் மீண்டும் திரையிட வாய்ப்பு…

பாபா படத்தில் ரஜினி

பாபா படத்தில் ரஜினி

கடந்த வெள்ளியன்று வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், பாபா திரைப்படம் ஓரளவு வசூலித்து இருப்பதால் திரைத்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ரஜினியின் பாபா எதிர்பார்த்த வெற்றியை கொடுத்ததுடன், மீண்டும் படங்களை ரிலீஸ் செய்யும் ட்ரெண்டை ஆரம்பித்து வைத்துள்ளது. இந்த அடிப்படையில் அஜித், விஜய் படங்கள் மீண்டும் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்து, திரைக்கதை எழுதி தயாரித்த படமான பாபா கடந்த 2002 இல் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஏற்கனவே வெளியான ரஜினி படங்களை விடவும், இந்தப் படம் சற்று வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாபா படத்தை தொழில்நுட்பத்தின் உதவியால் மாஸ்டரிங் செய்து, காட்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கடந்த கடந்த 10ஆம் தேதி மீண்டும் வெளியிட்டிருந்தார்கள்.

குறிப்பாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பாபா படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் உள்பட சினிமா ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் விரும்பி பார்த்தனர்.

பிரபல இணையதளம் வெளியிட்ட டாப் 10 திரை நட்சத்திரங்கள் - முதலிடத்தை பிடித்த தமிழக நடிகர்!

ரஜினியின் பிறந்த நாளையொட்டி இந்த படம் நேற்று பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடியது. அந்த வகையில் மீண்டும் திரையிடப்பட்ட பாபா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை வசூல் ரீதியாக பெற்றுள்ளது.

கடந்த வெள்ளியன்று வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், பாபா திரைப்படம் ஓரளவு வசூலித்து இருப்பதால் திரைத்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த படங்களை டிஜிட்டல் முறையில் மாஸ்டரிங் செய்து மீண்டும் வெளியிடலாமா என்று கோலிவுட் தயாரிப்பாளர்கள் ஆலோசித்து உள்ளனர்.

பரபரப்பான கட்டத்தில் கலர்ஸ் தமிழ் உள்ளத்தை அள்ளித்தா சீரியல்

இதன் அடிப்படையில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான படங்கள் மீண்டும் வெளியாகுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாபா படம் ஆரம்பித்து வைத்துள்ள ரீ ரிலீஸ் ட்ரெண்டானது, மற்ற சூப்பர் ஹிட் படங்களும் மீண்டும் வெளியாக வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Rajinikanth