நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லையா?

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என பரவிய செய்தியையடுத்து, அது வதந்தி என அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லையா?
ரஜினிகாந்த்
  • News18 Tamil
  • Last Updated: November 22, 2020, 12:12 PM IST
  • Share this:
கொரோனா பரவலுக்கு முன்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வந்த ரஜினிகாந்த், ஊரடங்குக்கு பின்னர் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

ரஜினிகாந்துக்கு வயது முதிர்வு மற்றும் ஏற்கெனவே அவருக்கு செய்யப்பட்டிருக்கும் சிறுநீரக அறுவை சிகிச்சை ரோனா பெருந்தொற்று காலம் இவற்றைக் காரணம் காட்டி அரசியல் பிரவேசம் வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக ரஜினிகாந்தின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வைரலானது.

இதற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த், “அந்த அறிக்கை என்னுடையது அல்ல. அதில் வெளிவந்திருக்கும் எனது உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டினை மக்களுக்கு அறிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.


மேலும் படிக்க: நதிகள் இணைப்பு: மெட்ரோ திட்டத்துக்கு நிதி - அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய கோரிக்கைகள்

பெருந்தொற்று காலத்தில் தனது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த், அவ்வப்போது கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ், யாரோ விஷமிகள் வதந்தியை கிளப்பி விட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading