முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH -'லவ் யூ தலைவா..' ஓடிவந்த ரசிகர்.. கண்டிப்புடன் அறிவுரை கூறிய ரஜினிகாந்த்!

WATCH -'லவ் யூ தலைவா..' ஓடிவந்த ரசிகர்.. கண்டிப்புடன் அறிவுரை கூறிய ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெயிலர் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பிற்காக  நேபாளம் செல்ல சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த், ரசிகரை ஒருவரை அன்பாக மிரட்டி அறிவுரை கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்துடன் கைகோர்த்திருக்கிறார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கிய 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன்லால் புகைப்படத்தை பதிவிட்டு, ‘ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திலிருந்து மோகன்லால்’ என பதிவிடப்பட்டது. இதன் மூலம் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால் என ஒரே படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் நடிக்க இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 50% அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நெல்சனின் முந்தைய படங்களை விட ஜெயிலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நேபாளத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றபின் அங்கிருந்து மாற்று விமானத்தில் நேபால் செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் ரசிகரை பார்த்து ஒவ்வொரு இடத்துக்கும் வரவேண்டாம் என்று அன்பாக ரசிகரை மிரட்டி அறிவுரை சொல்லி சென்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

Also read... WATCH: பேயாக திகிலூட்டும் காஜல் அகர்வால்.. மிரட்டும் 'கருங்காப்பியம்' பட டிரைலர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth