• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. 4 நாட்கள் வரை சிகிச்சை பெறுவார் என தகவல்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. 4 நாட்கள் வரை சிகிச்சை பெறுவார் என தகவல்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்துடன் இருப்பதாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலத்துடன் இருப்பதாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

    டெல்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. பின்னர் அவர் சென்னைக்கு திரும்பிய நிலையில், நேற்று காலை தனது குடும்பத்தினருடன் 'அண்ணாத்த' திரைப்படத்தை பார்த்ததாக ஹூட் செயலியில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் நேற்று மாலை திடீரென சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உறவினர் ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி மகேந்திரன், ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவித்தார். அவர் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது, நிச்சயம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும்போது வீட்டில் இருப்பார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து எனக்கு தெரியாது.தீபாவளிக்கு படம் வெளியாகும் போதும் ரஜினியும் மருத்துவமனையில் இருந்து வெளியாகி இருப்பார். உறவினர் என்ற முறையில் பார்க்கவந்துள்ளேன் என்றார்.

    இதனிடையே, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினி நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: