• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஸ்வாசம் ஒன்னுமே இல்லனு நினைச்சேன், ஆனா...ரஜினி பேச்சு!

விஸ்வாசம் ஒன்னுமே இல்லனு நினைச்சேன், ஆனா...ரஜினி பேச்சு!

விஸ்வாசம் குறித்து ரஜினி ஹூட்

விஸ்வாசம் குறித்து ரஜினி ஹூட்

இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் ஆவதற்கு விஸ்வாசம் படத்தில் என்ன இருக்கு என நான் யோசனை செய்தேன். ஆனால், போகபோக படத்தின் கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க படத்தின் நிறமே மாறிவிட்டது என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்த்  அண்ணாத்த மற்றும் விஸ்வாசம் திரைப்படம் தொடர்பாக தனது ஹூட் பக்கத்தில் பேசியுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யா தொடங்கியுள்ள ஹூட் செயலியில் இணைந்துள்ளார். இதன் மூலம் தனது குரலிலேயே  பல்வேறு தகவல்களையும் கூறி வருகிறார். அந்த வகையில், இன்று அவர் வெளியிட்டுள்ள ஹூட்டில்,  பேட்டை திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காலா, கபாலி திரைப்படங்களின் வயசான ரோல் பண்ணியிருந்தேன். பேட்ட திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்னை ஸ்டைலிஷாக காட்டி இருந்தார்.

    பேட்ட திரைப்படத்தின்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. பேட்ட, விஸ்வாசம் இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. விஸ்வாசம் திரைப்படம்  இவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருப்பதால் அதனை பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.  படத்தின் தயாரிப்பாளர் நண்பர் தியாகராஜனிடன் கேட்டு விஸ்வாசம் திரைப்படத்தை பார்த்தேன்.

    இதையும் படிங்க: நயன்தாராவின் கணவராக நடிக்கப் போகிறவர் யார்? - காட்ஃபாதர் சர்ச்சை

    படம் பார்த்தபோது நல்லாவே இருந்தது. இடைவேளை முடிந்தது, இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் ஆவதற்கு படத்தில் என்ன இருக்கு என நான் யோசனை செய்தேன். ஆனால், போகபோக படத்தின் கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க படத்தின் நிறமே மாறிவிட்டது. Excellent ஆக இருந்தது சூப்பர் படம்.. எனக்கு தெரியாமலேயே கையை தட்டினேன். உடனே தியாகராஜன் சாரிடம் கூறி சிவாவை சந்தித்தேன்.

    சிவா குழந்தை மாதிரி.. அவரை பார்த்ததும் பிடித்துவிட்டது. அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி, எனக்கு கதை கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: அண்ணாத்த: கதை சொல்லும்போதே சிவா அழ வைத்து விட்டார்- ரஜினி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: