Home /News /entertainment /

13 கோடி செக் மோசடி வழக்கில் இன்றும் ஆஜராகாத நடிகர் ராஜசேகர் அவரது மனைவி ஜீவிதா ராஜசேகர்

13 கோடி செக் மோசடி வழக்கில் இன்றும் ஆஜராகாத நடிகர் ராஜசேகர் அவரது மனைவி ஜீவிதா ராஜசேகர்

ஜீவிதா - ராஜசேகர்

ஜீவிதா - ராஜசேகர்

திருவள்ளூர் எச்டிஎஃப்சி வங்கி காசோலை 13 கோடி ரூபாய் பணம் இன்றி அளிக்கப்பட்ட வழக்கில் இன்றும் உடல்நலக் குறைவு என்பதை காரணம் காட்டி ஜீவிதா ஆஜராகவில்லை

    இதுதாண்டா போலீஸ் திரைப்பட  தெலுங்கு நடிகர்  ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் 13 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கில் ஆஜராக வேண்டும் என திருவள்ளூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜீவிதா ராஜசேகர் ஆஜராகவில்லை.   

    இதுதாண்டா போலீஸ் திரைப்பட புகழ் தெலுங்கு நடிகர் ராஜசேகர் ஜீவிதா தம்பதியர் செக் மோசடி வழக்கில், ஆந்திர மாநிலம் நகிரி நீதிமன்றத்தில் கடந்த 27-ஆம் தேதி ஆஜர் ஆகாத நிலையில், வழக்கறிஞர் முருகன் என்பவர் மட்டும் அவர்கள் தரப்பில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில்  13 கோடி ரூபாய் செக் மோசடி புகாரில் அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த கோடீஸ்வர ராவ் - ஹேமா  தம்பதியர், கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி வழங்கிய காசோலை பவுன்ஸ் ஆனதால், ஜீவிதா ராஜசேகர் மீது நகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இவ்வழக்கில் 27-ம் தேதி ஆஜர் ஆகாத நிலையில், ஜீவிதா ராஜசேகர் தனக்கு உடல்நலக்குறைவு என்றும் கொரோனா என்றும் சான்றை சமர்ப்பித்துள்ளார். மருத்துவமனையின் சான்றை ஏற்காத நீதிமன்றம், அவர் கட்டாயம் ஜூன்  17-ஆம் தேதி ஆஜராக வேண்டுமென்று பொறுப்பு நீதிபதி லீலா ஷேம சுந்தரி தெரிவித்தார்.   இதுபோன்று 13 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் உள்ள, விரைவு நீதிமன்றத்தில் இன்று   30-ஆம் தேதி ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஆஜராகாத பட்சத்தில்,  ஜீவிதா ராஜசேகருக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும் அல்லது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலை உருவாகும் என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று திருவள்ளூர் நீதிமன்றத்திலும் ஜீவிதா ராஜசேகர் ஆஜராகவில்லை.

    இதனையடுத்து அவர்களை கட்டாயம் வருகிற ஜூலை 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் என, 26 கோடி ரூபாய் செக் பவுன்ஸ் வழக்கு மற்றும் ஆந்திர மாநிலம் மகாராஜபுரம்  பகுதியில் நிலம் பத்திரம் செய்ததில் மோசடி உள்ளிட்ட  புகார்கள், ஆந்திர மாநிலம் நகரி மற்றும் திருவள்ளூர் நீதிமன்றங்களில் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஜீவிதா ராஜசேகர் தரப்பினர் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோட்டீஸ்வர ராவ் தம்பதியினர்  திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாத்தி கம்மிங் பாடலுக்கு அட்டகாச நடனமாடிய ரன்வீர் சிங்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருவள்ளூர் எச்டிஎஃப்சி வங்கி காசோலை 13 கோடி ரூபாய் பணம் இன்றி அளிக்கப்பட்ட வழக்கில் இன்றும் உடல்நலக் குறைவு என்பதை காரணம் காட்டி ஜீவிதா ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெறும் இரண்டு முறை மட்டுமே ஜீவிதா ராஜசேகர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் என்றும் பத்துமுறை ஆஜராகாமல் பல்வேறு காரணங்களை கூறி தடுத்து விட்டதாகவும் எதிர் தரப்பினர் தெரிவித்தனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி