ஒரு நல்ல பயணம்... ரகுமானின் பொன்னியின் செல்வன் நெகிழ்ச்சிப் பதிவு!

நண்பர்களுடன் ரகுமான்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இரு பாகங்களாக படமாக்கி வருகிறார் மணிரத்னம். முதல் பாகத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடக்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொன்னியின் செல்வன் படத்தில் ரகுமான் முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருகிறார். அவரது பழைய நண்பர் நடிகர் பாபு ஆண்டனிக்கும் படத்தில் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு நண்பர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்ட தருணத்தை ரகுமான் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். 

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இரு பாகங்களாக படமாக்கி வருகிறார் மணிரத்னம். முதல் பாகத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடக்கிறது. குவாலியரில் படப்பிடிப்பை முடித்து தற்போது இந்தூரில் படப்பிடிப்பை தொடர்கின்றனர். ரகுமான், பாபு ஆண்டனி உள்ளிட்டவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Also read... தீபாவளிக்கு மோதிக்கொள்ளும் சூப்பர் ஸ்டார்கள்...?

பாபு ஆண்டனி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை ரகுமான் பகிர்ந்து, 'ஒரு நல்ல பயணம். என் நெருங்கிய நண்பா, மீண்டும் ஒன்றாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. பழைய நினைவுகளை மீண்டும் உற்சாகத்துடன் நினைக்க முடிந்தது. இந்த சரித்திரப் படத்தில் நீயும் இருப்பது மகிழ்ச்சி. உனது வருங்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்
Published by:Vinothini Aandisamy
First published: