முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ்

ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ்

Rudhran Release Date : ருத்ரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்துடைய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் லாரன்ஸ்  Five Star  கதிரேசன் இயக்கும் ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு கே.பி. திருக்குமரன் கதை, திரைக்கதை,  வசனம் எழுதியுள்ளார்.  இதற்கான படத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தின் முதல் பார்வையை சமீபத்தில் பட குழுவினர் வெளியிட்டனர்  அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இதையும் படிங்க - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்… ஆவலைத் தூண்டும் வீடியோ 

இந்த நிலையில் ருத்ரன் திரைப்படம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.  ஆக்ஷன் ஃபார்முலாவில் ருத்ரன் உருவாகி வருகிறது.

ருத்ரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இந்தத் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

First published:

Tags: Actor Raghava lawrence