முதல்வர் மற்றும் விஐபி-க்களின் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் வழிநெடுக காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும், சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து முதல்வர் மற்றும் விஐபிகளின் வருகையின்போது சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக மண்டல ஐஜி, ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள லாரன்ஸ் “சாலையில் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன்.
பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காக, அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார், நானும் வருந்தி இருக்கிறேன். அந்தவகையில் இந்த ஆணையை கண்டு மன நிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.