காஞ்சனா இந்தி ரீமேக்கில் திருப்பம் ஏற்படுமா? - ராகவா லாரன்ஸ் அறிக்கை

news18
Updated: May 26, 2019, 4:01 PM IST
காஞ்சனா இந்தி ரீமேக்கில் திருப்பம் ஏற்படுமா? - ராகவா லாரன்ஸ் அறிக்கை
அக்‌ஷய்குமாருடன் ராகவா லாரன்ஸ்
news18
Updated: May 26, 2019, 4:01 PM IST
காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகி வரும் லக்‌ஷ்மி பாம் படம் குறித்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும், ஹீரோயினாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

த்ரில்லர் பேய் படமாக உருவான இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவரும் வண்ணம் காமெடி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சமீபத்தில் தமிழில் வெளியான இந்தப் படத்தின் 3-வது பாகமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.
8 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இந்தி ரீமேக் பணிகளில் ஈடுபட்டார் ராகவா லாரன்ஸ். லக்‌ஷ்மி பாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க, ஷமினா என்டர்டெயின்மென்ட் மற்றும் துஷார் என்டர்டெயின்மென்ட் ஹவுஸ் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அக்‌ஷய்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இயக்குநர் ராகவா லாரன்சின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Loading...இதையடுத்து படத்தில் இருந்து தான் விலகுவதாக அறிக்கை வெளியிட்ட லாரன்ஸ், “உலகத்தில் பணத்தை விட மரியாதை தான் முக்கியம், அதானல் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகுகிறேன். படத்தில் இருந்து விலகுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது அதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய அனுமதி இல்லாமல் நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது வேறொருவர் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. ஒரு இயக்குநருக்கு தெரியாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பது வேதனையை அளிக்கிறது.

அந்த போஸ்டர் நன்றாகவும் இல்லை. நான் நினைத்தால் இந்தப் படத்தை எடுக்கவிட முடியாமல் செய்ய முடியும் ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். அக்‌ஷய் குமார் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் இப்படத்தின் கதையை அவரிடம் தருகிறேன். அவர் வேறு யாரையாவது வைத்து எடுத்துகொள்ளலாம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியிருந்தார்.இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ், அதில் கூறியிருப்பதாவது, சில தினங்களுக்கு முன்பு லக்‌ஷ்மி பாம் படத்திலிருந்து வெளியேறுவது பற்றி தெரிவித்திருந்தேன். அப்போதிருந்தே என்னுடைய ரசிகர்களும், அக்‌ஷய்குமாரின் ரசிகர்களும் இந்தப் படத்தை தானே இயக்குமாறு என்னிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய அன்பில் நான் திளைத்துப் போனேன்.

ஆனால் உங்களைப் போலவே கடந்த ஒருவாரமாக நானும் வருத்தத்தில் இருக்கிறேன். நீண்ட நாட்களாக இந்தப் படத்தை இயக்க மிகவும் ஆர்வமாக காத்திருந்தேன். இந்தப் படத்துக்காக எனது தேதிகளை ஒதுக்கி, முன் தயாரிப்பு பணிகளுக்காக படத்தைச் செலவழித்தேன்.

படத்தின் தயாரிப்பாளர்கள் என்னைச் சந்திப்பதற்காக இன்று சென்னை வருகின்றனர். இது இது முழுக்க முழுக்க அவர்கள் கைகளில் தான் இருக்கிறது. என்னுடைய சுயமரியாதைக்கு பாதிப்பில்லாமல் வேலை செய்வதாக இருந்தால் இதுகுறித்து யோசிப்பேன். சந்திப்புக்குப் பின்னர் பார்க்கலாம். இந்த விஷயத்தில் அக்கறை கொண்டிருந்த அனைத்து ரசிகர்களிடமும் இதைத் தெரிவிக்க நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: தென்னிந்திய இயக்குநர்களை புறக்கணிக்கிறதா பாலிவுட் திரையுலகம்?

First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...