முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சமூக சேவைக்காக கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற ராகவா லாரன்ஸ்!

சமூக சேவைக்காக கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் ருத்ரன் படத்தின் வேலைகளை லாரன்ஸ் கிட்டத்தட்ட முடித்துவிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நடிப்பு மற்றும் நடன திறமைக்கு பெயர் பெற்றவர் ராகவா லாரன்ஸ். அதோடு அவரது சமூக சேவைகள், பொது மக்களிடம் அவரை நெருக்கமாக்கியது. நடன இயக்குனராக கரியரை ஆரம்பித்து நடிகராக மாறிய லாரன்ஸுக்கு தற்போது கெளரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் சமூக சேவைக்கான டாக்டர் பட்டத்தை லாரன்ஸுக்கு வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் லாரன்ஸ் சார்பில் அவரது தாயார் கண்மணி அந்த கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிர்ந்ததோடு, ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லாரன்ஸ், "சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம். இந்த விருதை எனக்கு வழங்கிய சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி. இது எனக்கு சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் என் சார்பாக என் அம்மா இந்த விருதைப் பெற்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

அப்போ ஷாருக்கான், இப்போ ரன்பீர் கபூர் - பாலிவுட் பிரபலங்களை இம்ப்ரெஸ் செய்த டிடி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீடு திரும்பிய நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டாரா?

படங்களைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் ருத்ரன் படத்தின் வேலைகளை லாரன்ஸ் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்தில், ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். அடுத்ததாக கொடி புகழ் துரை செந்தில் குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் எழுதியுள்ளார்.

First published:

Tags: Actor Raghava lawrence