சந்திரமுகி 2 படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் தோற்றத்தை மாற்றியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இதனை இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2-வில், ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும் படத்தில், ரவி மரியா, ராதிகா சரத்குமார், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
‘நல்லா தூங்கிட்டு படம்பார்க்க வாங்க’ – சிம்பு ரசிகர்களுக்கு கவுதம் மேனன் வேண்டுகோள்…
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
Hi everyone! I want to share a small update about Chandramukhi 2 and my trust! pic.twitter.com/jLPrVm7q3N
— Raghava Lawrence (@offl_Lawrence) September 13, 2022
சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று நிறைவுபெற்றுள்ளது. இந்நிலையில் படத்திற்காக தனது உடல் தோற்றத்தை அதிரடியாக மாற்றியுள்ளார் ஹீரோ ராகவா லாரன்ஸ்.
Ratchasa Maamaney: பொன்னியின் செல்வன் ‘ராட்சஸ மாமனே’ லிரிக் வீடியோ வெளியீடு!
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Raghava lawrence