ஜெய் பீம் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் நாளுக்குநாள் வலுவாகிக் கொண்டே செல்கிறது. படத்தில் அதை வைக்கவில்லை, இதை சொல்லியிருக்கலாம் என்ற குறைகளைக் கடந்து படம் என்ன சொல்ல முயன்றதோ அதனை வலுவாகவே கூறியிருக்கிறது.
28 வருடங்களுக்கு முன் செய்யாத குற்றத்துக்காக போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்டவர் இருளர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ராசாக்கண்ணு. இவரது மரணத்துக்கு நீதி கேட்டு 13 வருடங்கள் தொடர்ச்சியாக போராடியவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன். அந்த வழக்கை எடுத்து வாதாடியவர் நீதியரசர் சந்துரு. இதனைத்தான் ஜெய் பீம் திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குனர் த.செ.ஞானவேல்.
இந்தப் படத்தைக் குறித்தும், அதன் பின்னாலுள்ள உண்மை நிகழ்வு குறித்தும் கேட்டு அறிந்து கொண்ட ராகவா லாரன்ஸ், ராசாகண்ணுவின் மனைவிக்கு தனது செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்.
A house for Rajakannu’s family 🙏🏼 #JaiBhim #Suriya @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @tjgnan @jbismi14 @valaipechu pic.twitter.com/nJRWHMPeJo
— Raghava Lawrence (@offl_Lawrence) November 8, 2021
"28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை இன்றைய தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய் பீம் படக்குழுவினருக்கும், ஜெய் பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா அவர்களுக்கும், திருமதி.ஜோதிகா அவர்களுக்கும், இயக்குனர் த.செ.ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மானமார்ந்த பாராட்டுகள்" என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Suriya, Jai Bhim, Raghava lawrence