திரௌபதி இயக்குநரின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்

திரௌபதி இயக்குநரின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்

ருத்ர தாண்டவம் ஷூட்டிங் ஸ்டில்

‘ருத்ரதாண்டவம்’ திரைப்படத்தில் நடிகர் ராதாரவி இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

  • Share this:
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படம் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் நெகட்டிவ் பப்ளிஷிட்டி மூலம் பேசு பொருளானது. அதேவேளையில் படத்தை இயக்கி தயாரித்த மோகன்.ஜி.க்கு லாபத்தை பெற்றுக் கொடுத்தது ‘திரௌபதி’.

இதையடுத்து மோகன் ஜி இயக்கும் அடுத்த படம் 2020-ம் ஆண்டுஅக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ர தாண்டவம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீண்டும் ‘திரெளபதி’ பட ஹீரோ ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடிக்கிறார். ‘முள்ளும் மலரும்’, ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’, உள்ளிட்ட சீரியல்கள் மற்றும் விஜய் டிவியின் குக்வித் கோமாளி 2 நிகழ்ச்சி என சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் தர்ஷா இத்திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

2021-ம் ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ராதாரவி இந்தப் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.‘ருத்ரதாண்டவம்’ திரைப்படத்துக்கு ஜூபின் இசையமைக்கிறார். ஃபரூக் ஒளிப்பதிவு செய்கிறார். ‘திரௌபதி’ படத்தை வெளியிட்ட 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: