மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி!

கொலையுதிர்காலம் பட விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்

news18
Updated: June 12, 2019, 11:41 AM IST
மீண்டும் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி!
தமிழக முதல்வருடன் நடிகர் ராதாரவி
news18
Updated: June 12, 2019, 11:41 AM IST
நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நயன்தாராவின் கொலையுதிர்காலம் பட விழாவில் பேசிய ராதாரவி, “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார்.

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இதை அதிமுக, அதிகாரப்பூர்வ அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.முன்னதாக நடிகர் ராதாரவி அதிமுகவில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக அரசை ஆதரிப்பது பற்றி முடிவு எடுக்கவில்லை - எம்எல்ஏ கருணாஸ்

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...