பேத்தியின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் நடிகர் ராதாரவி.
பழம்பெரும் நடிகரும் அரசியல்வாதியுமான எம்.ஆர்.ராதாவின் மகனான ராதாரவி, இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'மன்மத லீலை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமையோடு பணியாற்றினார்.
சமீபத்தில் ராதாரவியின் புதிய வித்தியாசமான லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 70 வயதான அவர் கோட் - சூட், கண்ணாடியில் கூலான தோற்றத்தில் காணப்பட்டார். பேத்தியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டில் ராதாரவி இந்த ஃபோட்டோஷூட்டை எடுத்துக் கொண்டாராம்.
காரிலேயே உடை மாற்றிக் கொள்வேன்... ரகுல் ப்ரீத் சிங் உருக்கம்
திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் அவரது பேத்தி பவித்ரா சதீஷ், தனது தாத்தாவை மார்டன் உடையில் பார்க்க ஆசைப்பட்டு, இந்த ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அந்தப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Radharavi