திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராதாரவி நீக்கம்

இயக்குநர் விகேஷ் சிவன் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை ட்விட்டரில் வலியுறுத்தினார்.

news18
Updated: March 25, 2019, 8:24 AM IST
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராதாரவி நீக்கம்
நடிகர் ராதாரவி
news18
Updated: March 25, 2019, 8:24 AM IST
நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா தற்சமயம் நாயகி சார்ந்த பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றான கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ராதாரவி, நடிகைகள் குறித்த பேசிய கருத்து சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

அதில் நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகள், நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது என பேசினார்.

நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து நடிகைகள் குறித்து மேடைகளில் தரக்குறைவாக பேசிவரும் ராதாரவிக்கு எதிராக #BanRadhaRavi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு அதில் ராதாரவி இனி திரைப்படங்களில் நடிக்க கூடாது என்றும், அவர் மீது நடிகர் சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல் கிளம்பி வருகிறது.

இதேபோல் இயக்குநர் விகேஷ் சிவன் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரை ட்விட்டரில் வலியுறுத்தினார்.இதையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.Also watch

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...