எந்த பெண்ணைப் பற்றி பேசினாலும், இந்த நடிகை சண்டைக்கு வந்துவிடுவார் - ராதாரவி பேச்சு

வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறவர்கள் ட்விட்டரில் போட்டு சர்ச்சையைக் கிளப்பிவிட்டார்கள். அது பூகம்பம் மாதிரி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது என்று பேசினார் ராதாரவி.

எந்த பெண்ணைப் பற்றி பேசினாலும், இந்த நடிகை சண்டைக்கு வந்துவிடுவார் - ராதாரவி பேச்சு
ராதாரவி
  • News18
  • Last Updated: March 5, 2020, 1:30 PM IST
  • Share this:
”நான் எந்த பொண்ணை பற்றி பேசினாலும் அவரிடம் தான் முதலில் பர்மிஷன் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றேன்” என்று நடிகர் ராதாரவி திரைப்பட நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடிகர் சசிகுமாரின் ராஜ வம்சம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நிக்கி கல்ராணி, விஜயகுமார், யோகிபாபு, ரேகா, மனோபாலா, தம்பி ராமையா ஆகியோர்  மற்றும் சிறப்பு விருந்தினராக, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ராதா ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது பேசிய  நடிகர் ராதாரவி, ”இந்த பொண்ணு எல்லா விஷயத்துக்கும் பொருந்தும் பொண்ணு” என்று நடிகை நிக்கி கல்ராணி குறித்து பேசினார். ”இப்படித்தான் தெரியாத்தனமாக பிரபல நடிகையை (நயன்தாரா) பற்றி எதேச்சையாக பேசினேன். வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறவர்கள் ட்விட்டரில் போட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டார்கள். அது பூகம்பம் மாதிரி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது” என்று நயன்தாராவின் விவகாரம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.


”நான் எந்த பொண்ணை பற்றி பேசினாலும் அவரிடம் தான் முதலில் பர்மிஷன் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இல்லை என்றால் தேவையில்லாத வேலைகளை வேலைவெட்டி இல்லாதவர்கள் செய்து கொண்டு வருவார்கள்” என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ராதாரவி ”நான் மட்டும் இந்தி மொழி கற்றுக்கொண்டிருந்தால் எனக்கு பாலிவுட்டில் அமோக வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். ஹிந்தி பயின்றிருந்தால் அங்கு ஐஸ்வர்யா ராயை பார்த்து பேசியிருப்பேன் என்றும் நான் முகமூடி போடாதவன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also See...
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading