நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது - ராதாரவி!

news18
Updated: June 12, 2019, 4:50 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது - ராதாரவி!
நடிகர் ராதாரவி
news18
Updated: June 12, 2019, 4:50 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு இருப்பதாக நடிகர் ராதாரவி குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று காலை முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் 18 ஆண்டுகள் இருந்தேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன்.

ஸ்டாலினுக்காக மட்டும் தான் திமுகவில் இணைந்தேன். நடிகை குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்ததற்கு பின்னரும் என்னை தற்காலிகமாக நீக்கியதாக அறிந்தேன். நிரந்தரமாக நீக்கிவிடுங்கள் என்று சொன்னேன்.

நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது. திமுக தலைமை கழகத்தில் இருந்து நாடக நடிகர்களை தொடர்பு கொண்டு எனக்கு ஆதரவாக செயல்படக்கூடாது எனக் கூறியுள்ளனர். நடிகர் சங்கத்தேர்தலை எனது பாணியில் சொல்லப்போனால் அது ஒரு ஆட்டுப் புழுக்கை தேர்தல்.திமுகவில் தற்போது இரட்டை தலைமை உள்ளது. சினிமா நிகழ்ச்சியில் பேசியதற்காக என்னை நீக்கியது தவறு. என்ன நடந்தது என்று திமுக தலைவர் ஸ்டாலின், என்னை அழைத்து விசாரித்திருக்கலாம்.
Loading...
அதிமுகவில் இணைவதென்று இரண்டு நாட்களுக்கு முன்பு தான் முடிவு செய்தேன். நான் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் பணமோ, பதவியோ கேட்டுப் போவதில்லை.

நில அபகரிப்பு தொடர்பான வழக்கை எதிர்கொள்வேன். நடிகர் சங்க தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி நேர்மையாக செயல்படமாட்டார். என்னை சங்கத்தில் இணைக்காமல் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறாது” என்று கூறினார்.

வெக்கேஷனில் நயன்தாரா... இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோஸ்!வீடியோ பார்க்க: என்னை எதிர்த்தவர்கள் எல்லாரும் விஷாலுக்கு எதிராக மாறிவிட்டார்கள் - ராதாரவி

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...