ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘புருஷன எதுக்கு கூட கூட்டிட்டு வர்றீங்க… தொல்லை’ - பட விழாவில் ராதாரவி பேச்சால் சர்ச்சை

‘புருஷன எதுக்கு கூட கூட்டிட்டு வர்றீங்க… தொல்லை’ - பட விழாவில் ராதாரவி பேச்சால் சர்ச்சை

நடிகர் ராதா ரவி

நடிகர் ராதா ரவி

படத்தில் நாங்கள் கெடுக்கும் வேலைகளை சின்னத்திரையில் பெண்கள் செய்கிறார்கள். – ராதா ரவி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லைசென்ஸ் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் ராதா ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

பாடகி ராஜலட்சுமி லைசென்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்திற்கான பத்திரிகையாளர் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று நடிகர் ராதா ரவி பேசியதாவது-

எங்க அப்பா சொன்ன மாதிரி, சினிமா அடிக்கிற காற்றில் நம்மை அப்படியே தூக்கிச் செல்லும். அடுத்த காற்றில் கீழே விழுந்து விடும். அதனால் எதையும் தலையில் ராஜ லட்சுமி ஏற்றிக் கொள்ளக் கூடாது.

சினிமாவில் இப்போதெல்லாம் நல்ல வேஷங்களை உருவாக்க முடியாது. ஏனென்றால் ஒரு வில்லனை எடுத்துக் கொண்டால் ஹீரோவே வில்லனாகவும் நடித்து விடுகிறார். கவர்ச்சி நடிகை வேடத்தை ஹீரோயினே எடுத்துக் கொள்கிறார். அப்பா அம்மா கேரக்டர் என்றால், ஹீரோவே இடைவேளைக்கு பிறக்கு அப்பா ஆகி விடுகிறார்.

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ஹீரோயின் ஆக அறிமுகமாகும் 'லைசென்ஸ்'

படத்தில் நாங்கள் கெடுக்கும் வேலைகளை சின்னத்திரையில் பெண்கள் செய்கிறார்கள். பாரதி என்ற கேரக்டரில் ராஜ லட்சுமி நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை தமிழ் சினிமாவில் வராத கதை. எனது 49 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் இதுபோன்ற கதையை நான் பார்க்கவில்லை.

சப்ஜெக்டிற்கு ஏற்ற கதாநாயகி. குத்து விளக்கு ஏற்றும்போது கூட ராஜலட்சுமி அவரது கணவரை அழைத்தார். அவரை கூட்டிட்டு வராதீங்க. எதுக்கு புருஷன கூட கூட்டிட்டு வறீங்க. தொல்லை. நீங்க ஏதோ பாதுகாப்புன்னு நினைக்கிறீங்க. அது பாதுகாப்பு அல்ல.

மாற்றுத்திறனாளி ரசிகருடன் நடிகர் விஜய்... இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

உங்களுக்கு நீங்கள்தான் பாதுகாப்பு. யாருமே யாரையும் பாதுகாக்க முடியாது. சினிமா மட்டுமல்ல, ஆபிசிலும் சரி, அரசியலிலும் சரி. நாம் நம்மைக் காப்பாற்றிக் கொண்டால்தான் முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

First published:

Tags: Kollywood