பாஜக பணம் தரும் கட்சியா...? அது ஒரு தேங்காய்மூடி கட்சி - ராதாரவி பேச்சு

பாஜக பணம் தரும் கட்சியா...? அது ஒரு தேங்காய்மூடி கட்சி - ராதாரவி பேச்சு
நடிகர் ராதாரவி
  • Share this:
பாஜக பணம் தரும் கட்சியா அது ஒரு தேங்காய் மூடிக் கட்சி என்று அக்கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

ஹரி உத்ரா இயக்கத்தில் பக்கத்து மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் கழிவுகளைக் கொட்டும் அவலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் கல்தா. இந்தப் படத்தில் ஆண்டனி சகாயராஜ், சிவா நிஷாந்த், ஐரா ஜெயின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாக்யராஜ், ராதாரவி, லெனின் பாரதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராதாரவி, என்னைப் பொறுத்த வரை காலை தொட்டு கும்பிடுவதே தவறு. நான் 5 படங்கள் தயாரித்திருக்கிறேன். ஆனால் இப்போது படம் தயாரிக்க பயமாக இருக்கிறது. திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். படம் பார்க்க வருபவர்கள் செல்போனை திரையரங்குக்குள் எடுத்து வரக்கூடாது என்று சட்டம் போட்டால் நன்றாக இருக்கும். அப்படிச் செய்தால் ஒரு படம் 3 காட்சிகள் வரை நன்றாகப் போகும்.
இந்தப் படத்தின் ஒரு காட்சியில் அரசியல்வாதிகளா எல்லாரையுமாடா சாவடிப்பீர்கள் என்று வசனம் இருக்கிறது. மக்கள் தான் அனைவரையும் சாவடிக்கிறார்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. மக்களுக்கு எந்த இடத்தில் தட்டிக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது என்றே தெரியவில்லை. பக்கத்து மாநிலத்திலிருந்து தமிழகத்தில் வந்து குப்பைகளைக் கொட்டுவதை வைத்து படம் இயக்கியிருக்கும் இயக்குநரை நான் பாராட்டுகிறேன்.

எதற்கெல்லாமோ போராடி 3, 4 கோடி கையெழுத்து வாங்குகிறோம். குப்பை கொட்டக் கூடாது என்று கையெழுத்து வாங்க வேண்டியதுதானே. குப்பை கொட்டுவதைச் சொல்வதால் அதிமுக அரசை திட்டுகிறார் என்று நினைக்க வேண்டாம். கடந்த 50 ஆண்டுகளாகவே குப்பை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை நாம் தான் வளர்க்கிறோம். யார் இந்த தெருவைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் ஓட்டு என்று சொல்லிப் பாருங்கள். அனைத்துத் தெருக்களும் சுத்தமாக இருக்கும்.ராதாரவி கட்சி மாறிவிட்டார். பணம் வாங்கிவிட்டார் என்கிறார்கள். பாஜகவில் பணம் தருவார்கள் என்று சொல்லலாமா? பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி. அவர்களுடைய எண்ணம் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்” என்றார்.

மேலும் படிக்க: காஞ்சி மடத்துக்கு தனது வீட்டைத் தானமாக வழங்கிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்