Home /News /entertainment /

3 சர்வதேச விருதுகள் 2 நாமினேஷன்களைப் பெற்ற பார்த்திபனின் இரவின் நிழல்!

3 சர்வதேச விருதுகள் 2 நாமினேஷன்களைப் பெற்ற பார்த்திபனின் இரவின் நிழல்!

இரவின் நிழல் படத்தின் போஸ்டர்

இரவின் நிழல் படத்தின் போஸ்டர்

கடுவெளி சித்தரின் பாடலை டி.வி.யில் கேட்டதாகவும், மிகவும் இருட்டாகவும், அழுத்தமாகவும் இருக்கும் இரவின் நிழல், படத்திற்கு இது சரியானதாக இருக்கும் என்றும் உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

    நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15-ம் தேதி திரைக்கு வருகிறது. 'உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்-லீனியர் படம்' என்ற பெருமையைப் பெற்ற இப்படம், சர்வதேச அளவில் மூன்று விருதுகளையும் இரண்டு பரிந்துரைகளையும் பெற்றுள்ளது.

    மூன்று விருதுகளில் இரண்டு விருதுகள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனுக்கும், ஒன்று படத்துக்கும் கிடைத்துள்ளது. வில்சன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகளை Cult Movies International film Festival மற்றும் Oniros Film Awards - New York ஆகியவற்றில் வென்றுள்ளார், அதே நேரத்தில் இரவின் நிழல் படத்துக்கான விருது Medusa திரைப்பட விழாவில் கிடைத்துள்ளது.

    நியூயார்க் சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் ரோம் இன்டர்நேஷனல் மூவி விருதுகள் ஆகிய இரண்டு திரைப்பட விருதுகளுக்கும் இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைக் கொண்டாடும் வகையில், இரவின் நிழல் படத்தின் இசை முதல் சிங்கிள் விழாவை பார்த்திபன் சென்னையில் நடத்தினார். மதன் கார்க்கி எழுதி ஸ்ரேயா கோஷல் பாடிய மாயவா தூயவா என்ற மெல்லிசைப் பாடலைத் தொடர்ந்து, ஏற்கனவே ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள பாவம் செய்யாதிரு மனமே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு புதன்கிழமை காலை வெளியிடுகிறது.

    புஷ்பா தி ரூல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி?

    கடுவெளி சித்தரின் பாடலை டி.வி.யில் கேட்டதாகவும், மிகவும் இருட்டாகவும், அழுத்தமாகவும் இருக்கும் இரவின் நிழல், படத்திற்கு இது சரியானதாக இருக்கும் என்றும் உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் பாடலை நிரஞ்சனா ரமணன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியுள்ளனர்.

    கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்!

    இரவின் நிழல் திரைப்படம் 50 வயது நபர் தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையை ஒரே ஷாட்டில் படமாக்குவதற்காக, 64 ஏக்கர் நிலத்தில், பெரிய பட்ஜெட்டில், 50 செட்களை அமைத்ததாக பார்த்திபன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆஸ்கார் விருது பெற்ற, Whiplash புகழ் கிரேக் மான் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பை செய்துள்ளார், மற்றொரு அகாடமி விருது வென்ற Cottalango Leon அதன் VFX மேற்பார்வையாளராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Parthiban, AR Rahman

    அடுத்த செய்தி